இன்னிக்கு ஒரு விசயம் நடந்தத நினைக்கும் போது என்னடா மனுச மனசுன்னு கோபம் வந்துச்சு
எங்க அலுவலகத்தில டெபுடி அட்மினிஸ்ட்ரேசன் மேனேசர் ஒரு பொண்ணு MBA படிச்சி வேலைக்கு வந்தவங்க. டிரைனியா இருந்தாங்க இப்ப தக்க வச்சிக்கிட்டாங்க.
என் அறைக்கு வந்து ரெம்ப நேரம் கணினி திரைய பாத்துட்டு ரெம்ப கவலையா என்னமோ நோண்டிட்டி இருக்க சரி கணினில ரெம்ப ஆராச்சி பண்றாங்க போலன்னு நினைச்சேன்.
நேரம் ஆக ஆக என்னால பொறுமையா வாய வச்சிட்டு சும்மா இருக்காமுடியாம என்னம்மா பண்றீங்கன்னு கேட்கப்போய்
சார் ஒரு டாக்குமெண்ட்ல பேக்ரவுண்ட்ல வாட்டர் மார்க் போட்டேன் இப்ப எடுக்கறது எப்படின்னு தெரியலன்னாங்க.
இத்தனைக்கும் அவங்க சொந்த கணினி வீட்ல இருக்கு, ஆபிஸ்ல லேப்டாப் இருக்கு பண்ணதும் அவங்க, ஆனா பாருங்க அத எடுக்க தெரியல.
சரி தள்ளுங்க பாக்கலாம்னு போய் 5 நிமிடத்தில வாட்டர் மார்க்க எடுத்துக்கொடுத்துட்டேன்..
எப்படின்னு சொல்லட்டுமா?
அப்படியே வேர்ட திறந்து Formate மெனுவில BackRound ல வந்தா கடைசியே Printed WaterMark..ன்னு இருக்கும். அத சுட்டுங்க…
சுட்டின பின்னாடி இப்படி ஒரு சாளரம் திறக்கும்
இதில உங்களுக்கு தேவையாவற்றை தேர்ந்தெடுத்துக்குங்க.
இப்ப பிரிண்ட் எடுத்தா இப்படித்தான் வரும்.
சரிங்களா.
பாருங்க, படிச்சவங்களுக்கு போன வழி தெரியல.
என்னத்த சொல்ல.