செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

விண்டோஸ் லைவ் ரைட்டர் –ஒலிப்படம்

10:16 PM Posted by: தமிழில் கணினி 0 comments

விண்டோஸ் லைவ் ரைட்டர் –ஒலிப்படம்

 

விண்டோஸ் லைவ் ரைட்டர் (வலைப்பதிவோர் ஸ்பெஷல்)

 

வலைப்பதிவோர்க்காக ஒரு இலவச எழுதி.


http://windowslivewriter.spaces.live.com/default.aspx
http://gallery.live.com/default.aspx?pl=8

9:50 PM Posted by: தமிழில் கணினி 0 comments

2008 ஆம் ஆண்டிலில் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மிகச்சிறந்த மென்பொருள்கள்

விண்டோஸ் தொழில்நுட்பத்தில் 2008 ஆம் ஆண்டிலில் மிகச்சிறந்த மற்றும் அதிக அளவில் டவுன்லோட் செய்யபட்ட மென்பொருள் பற்றிய விபரம் தொகுக்கப்பட்டுள்ளது.

logofirefox 1.FireFox 3 ஒரு டசி்னுக்கு மேற்பட்ட (Smart Location Bar, Add-ons manager,intuitive interface, Malware protection,Improved download manager,Native looks for every system,Remember pas  sword,Smart bookmarks,Bookmark Manager) புதிய வழிமுறைகளையும், சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளியிடபட்ட இந்த மென்பொருள் இணையபயன்பாட்டை மிகவும் எழிதாக ஆக்கியுள்ளது.

pdftoword_cropped2. PDF to Word converter,  இதுவரை நாம் வேட் டொக்குமெண்டை பிடிஎப் ஆக மாற்றும் மென்பொருளை தான் அதிகம் பார்த்து இருக்கின்றோம், ஆதுவும் தற்போது தனிமென்பொருளாக இல்லாமல் வேட்வுடன் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மென்பொருள் சற்று வித்தியாசமாக பிடிஎப் டொக்குமெண்டை வேட் டொக்குமெண்டகா மிகச் சுலோபமாக மாற்றி தருகின்றது. (குறிப்பு மிகப்பெரிய வேட் டொக்குமெண்டை மாற்ற இந்த மொன்பொருள் சிறந்தது அல்ல)

ccleanerthumb3. CCleaner என்று அழைக்கப்படும் Crap Cleaner மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத அனைத்து விதமான டெம்பரரி பைல்ஸ், குக்கிஸ், மொரி டொப், மற்றும் சிஸ்டம் லொக் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஆகற்ற உதவுகின்றது. என்னுடைய கணினியில் தேவையில்லாமல் இருந்தவற்றை அகற்றி எனக்கு 2.4 GB  இடத்தை தந்துள்ளது.

image 4. இதுவரை காசு கொடுத்து வாங்கிய ஆன்டி-வைரஸ் மென்பொருளை இலவசமாக வெளியிட்டு கலக்கிய நிறுவனம் AVG அது தனது 2008ம் வருடத்தில் புதிய இட்டபேஸ், பாஸ்ட் பர்பாமன்ஸ் மற்றும் இணையதள பாதுகாப்பு அப்டேட் என பல புதிய விசயங்கைளை அறிமுகப்படுத்தியுள்ளது.

image 5. Quick Media Converter எந்த ஒரு ஓடியோ மற்றும் வீடியோ கோப்பை ஒரு போமெட்டில் இருந்து மற்றெரு போமெட்டிக்கு எழிதாக மாற்ற உதவுகின்றது மேலும் டிரக் அன்ட் டிராப் முறையில் உங்கள் ஓடியோ மற்றும் வீடியோ கோப்பை எழிதாக இழுத்து போட்டு DivX and Xvid to Xbox and iPhone output என சிறப்பாக மாற்ற உதவுகின்றது.

image 6. Google Chrome கூகிலின் மற்றும் ஒரு வெளியீடு, அருமை என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடமுடியாது. பயர்பாக்ஸ் பயன்படுத்தியவர்கள் அவ்வளவு எழிதாக எற்றுகொள்ள மாட்டர்கள். இருந்தாலும் இது நல்ல போட்டியை உண்டாக்கும். இதில் எனக்கு பிடித்தது வேகமாக இணையா பக்கங்களை இறக்கம் செய்வது மற்றும் கூகில் சேர்ச் உடன் இணைந்து வேகமாக தேட உதவுவது. நாம் பார்த்த இணைய பக்கங்களை thumnail ஆக படம் இட்டு காட்டுவது.

image 7. EverNote நீங்கள் ஏதாவது புரஜக்ட் செய்பவர் அல்லது எதுவும் ஆராச்சியில் இடுபடுபவர் என்றால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பார்த்த பக்கங்ளை சேகரித்து வைக்க உதவுவது மட்டும் இல்லாமல் வளைத்தள விபரம் போன்றவற்றையும் சேகரித்து வைப்பதால் மேல் விபரம் தேவைப்படும் போது விரைவாக சென்று பார்க்க உதவுகின்றது.

image 8. Windows Live Writer வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும். வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.

9. NHM Writer தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

விண்டோஸ் லைவ் ரைட்டர் -3

9:45 PM Posted by: தமிழில் கணினி 0 comments

வலைப்பூவில் எழுதுவதற்கு தற்போது பல வழிகள் உள்ளன.

நம்மில் பலரும் ஈகலப்பையை பயன்படுத்தி நேரடியாக ப்ளாகர்.காம் (Blogger.com) வழங்கும் 'புதிய இடுகை' (New Post)மேடையில் எழுதி பதிவு செய்வது வழக்கம். ஆனால் இதற்கு நாம் 'ஆன் லைனில்' இருக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து 'ஓசியில்' இணைப்பை பயன்படுத்துபவர்களுக்கு இதுதான் எளிது. இதில் இன்னுமொரு தொல்லை, நம்முடைய இடுகையின் நகலை நம்முடைய கணினியில் சேமித்துக்கொள்ள முடிவதில்லை. 

இதற்கு மாற்றாக நம்முடைய கணினியில் உள்ள நோட்புக்கில் எழுதி அதை காப்பி, பேஸ்ட் மூலம் ப்ளாகரிலுள்ள புதிய இடுகை தளத்தில் பதிவு செய்யலாம். இது ஆஃப் லைனில் இடுகையை தயாரிக்க வகை செய்கிறது. இடுகையின் நகலையும் கணினியில் சேமிக்க முடிகிறது. ஆனால் முந்தைய முறையை விடவும் கூடுதல் நேரம் தேவைப்படும்.

இவ்விரண்டு முறைகளுக்கும் மாற்றாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் ரைட்டர் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கிடைக்கும் இடம்:

இதிலுள்ள வசதிகள் என்ன?

நம்முடைய பதிவு பக்கத்திலேயே நேரடியாக எழுதுவது போன்ற பிரமையை அளிக்கிறது:

Post scr

இதற்கு  'வியூ' மெனுவில் 'வெப் லேஅவுட்' தெரிவு செய்ய வேண்டும்.

win1

மேலும் 'Insert Picture', 'Insert Hyperlink', வசதிகள் மூலம் எந்த ஒரு படத்தையோ, வலைத்தள சுட்டையையோ மிக எளிதாக இணைத்துவிடலாம். இதிலுள்ள படங்கள், சுட்டி எல்லாமே இவ்வாறு பதிவு செய்தவைதான். இதற்கென படங்களை வேறெந்த third party தளங்களில் சேமித்து வைத்து தரவிறக்கம் செய்ய தேவையில்லை.

win3

நம்முடைய எழுத்துருவின் வடிவம், நிறம் ஆகியவற்றையும் மிக எளிதாக அமைத்துக்கொள்ள உதவுகிறது 'Format' மெனு.

மேலும் 'Align' 'Numbering' 'Bulleting' வசதிகள் நம்முடைய இடுகையை மெருகூட்டவும் உதவுகின்றன.

win4

இதிலுள்ள 'Table' மெனு ஒரு முழுமையான 'table' ஐ இணைக்கவும் வசதி செய்கிறது. 

win5

'Tools' மெனுவிலுள்ள 'Preferences' மெனு மேலும் பல வசதிகள செய்துக்கொள்ள உதவுகின்றன.

win6

மேலும் இதே மெனுவிலுள்ள 'Accounts' மெனு நம்முடைய அனைத்து வலைப்பூக்களையும் இந்த மேடையில் இணைத்துக்கொள்ள உதவுகிறது.

win7

'Weblog' மெனு நம்முடைய இடுகையை இடுவதற்குண்டான பதிவை தெரிவு செய்ய உதவுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உதவுகிறது. ஒரே மேடையில் தங்களுடைய எந்த பதிவையும் நொடிப்பொழுதில் தெரிவு செய்ய முடியும்.

win9

சரி... எழுதி முடித்தாகி விட்டது.

நம்முடைய இடுகையை நம்முடைய கணினியிலேயே சேமிக்கவும் 'Save Local Draft' என்ற மெனு வசதி செய்கிறது. அதாவது நம்முடைய வலைப்பூவில் எப்படி தெரியுமோ அதே வடிவத்தில்!!

நாம் எழுதி முடித்ததும் உடனே பதிவு செய்துவிட வேண்டும் என்றில்லை. எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் 'Open' மெனுவை க்ளிக்கினால் நாம் சேமித்து வைத்துள்ள இடுகைகளின் பட்டியல். இப்பதிவு நான் சனி, ஞாயிற்று கிழமைகளில் தயாரித்தது.

win12

'Publish' செய்வதற்கு முன்னர் நம்முடைய இடுகை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை காண ' Web Preview' வசதியும் உண்டு!

win11

ஒரே ஒரு க்ளிக்கில்  நேரடியாக நம்முடைய வலைப்பூவில் வெளியிடும் 'Publish' வசதியும் இருப்பதால் அதற்கென 'blogger.com' தளத்தில் ஓவ்வொரு முறையும் நம்முடைய ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து அவதிப்படவும் தேவையில்லை.

மென்பொருளை தரவிறக்கம் செய்யும்போதே நம்முடைய பளாகர் ஐடியையும் பாஸ்வேர்டையும் ஒரேயொரு முறை கொடுத்து சேமித்து விட்டாலே போதும்.

லைவ் ரைட்டர்- 2

9:41 PM Posted by: தமிழில் கணினி 0 comments

லைவ் ரைட்டர் டெஸ்ட் பதிவு

Posted on August 7, 2007. Filed under: அனுபவம், இணைய கலாச்சாரம், கணினி, கொஞ்சம் பெரிய பதிவு, பரிந்துரை, மேட்டர் |

வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு எனக்குத் திருப்தியளித்ததில்லை. மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் விண்டோஸையும் ஆபீஸையும் வேறு வழியில்லாமல் பயன்படுத்தும் பலரில் ஒருவன் நான். அதனால் வேறு எந்த மைக்ரோசாஃப்ட் தயாரிப்பையும் பயன்படுத்தியதில்லை.

padam 1 பிக் பிரதர் முழுக்க முழுக்க வலைப்பதிதலுக்காகவே உருவாக்கிய ஒரு மென்பொருளில் என்ன இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விண்டோஸ் லைவ் ரைட்டரை நிறுவினேன். இதை நிறுவிப் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் இதன் எளிமையும் தோற்றமும் என்னைக் கவர்ந்தன (படம் 1). எனது அனுபவம் குறித்து மேலும் சில வரிகள் பின்வருமாறு…

லைவ் ரைட்டர் கோப்பின் சைஸ் 3.58 எம்.பி.தான். புள்ளிவலை சட்டகப்பணி (.NET Framework) உமது கணினியில் இல்லையென்றால் 23 எம்.பி. கோப்பை இறக்கிக்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லாமல் இன்ஸ்டால் ஆகிவிடுகிறது.

பிறகு லைவ் ரைட்டர் சுருக்குவழி மேல் இரட்டைச் சொடுக்கிட்டால் (double click) என் ஃபயர்வால் உடனே அபாய அறிவிப்பு செய்கிறது. வழக்கமான மைக்ரோசாஃப்ட் உளவு வேலைதான். லைவ் ரைட்டர் என்னைக் கேட்காமல் மைக்ரோசாஃப்ட்டின் சர்வர் ஒன்றுடன் இணைக்கப் பார்த்தது. அதைத் தடுத்த பின் லைவ் ரைட்டர் சட்டென்று தொடங்குகிறது.

எம்.எஸ். ஆபீஸ் 2003ஐ உரித்து வைத்தாற்போன்ற தோற்றம். வேர்ட்பேடின் எளிமை. மிகச் சுலபமாக வலைப்பதிவுக் கணக்கு விவரங்களைப் பதிய முடிகிறது. நம் வலைப்பதிவில் என்ன தீம் பயன்படுத்துகிறோமோ அதன் லேஅவுட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இதன் பதிவெழுதும் திரை (எழுதி, compose screen…). அதாவது நம் வலைப்பதிவில் நேரடியாக எழுதும் ஃபீலிங்கைக் கொண்டுவருகிறார்களாம் (படம் 2).

வேர்ட்பிரஸிலும் பிளாகரிலும் எழுதியின் அகலம் கச்சிதமாக இருக்கும். லைவ் ரைட்டரின் எழுதி அதை விட அகலமாக இருப்பது திரையரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து 70 MM படம் பார்ப்பது போல் அசௌகரியமாக இருக்கிறது. ஆனால் பெரிய தலைவலி என்று சொல்ல முடியாது. போல்டு, இட்டாலிக்ஸ், படம் செருகுதல், குறிச்சொல் சேர்த்தல் என்று வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன.

பதிவை எழுதும்போதே அதன் வரைவை நம் வலைப்பதிவில் சேமித்துக்கொள்ளலாம். HTML பார்த்து மாற்றலாம். முன்னோட்டம் பார்க்கும் வசதி அட்டகாசம். பதிவைப் போட்டதும் நம் வலைப்பதிவில் அது எப்படித் தெரியுமோ அப்படிக் காட்டுகிறது (படம் 3). படத்தை ஒட்டியதும் படத்தின் சைஸ், எஃபெக்டுகள் போன்ற வசதிகள் வலப்பக்கம் தெரிகின்றன. சும்மா சில நகாசுகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரு வலைப்பதிவுக்கு இது போதும். தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் Xanga-வில் வலைப்பதிவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கருவிப் பட்டையின் வலப்பக்கம் வேர்ட்பிரஸ் குறிச்சொற்களின் (Categories) தொங்கு பட்டியலைப் பார்க்கலாம் (படம் 4). எழுதும் பகுதிக்குக் கீழே, ஸ்டேட்டஸ் பாருக்கு மேலே, பதிவின் விவரங்கள், பின்தொடர் சுட்டி ஆகிய விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Tools > Preferences என்ற மெனுப் பாதையில் போனால் ping சர்வர்களில் தமிழ் பிங் சர்வர்களை சேர்க்கலாம் (எனக்குத் தேன்கூடு வேலை செய்கிறது).

இது பீட்டா பதிப்பு. ஒரே விஷயத்திற்கு அங்கங்கே பட்டன்கள் இருக்கின்றன. உதாரணமாக, பின்தொடர் சுட்டி கொடுக்க இரண்டு இடங்களில் க்ளிக் செய்யலாம் - எழுதும் பகுதிக்குக் கீழே, பிறகு கருவிப் பட்டையில் கடைசி பட்டன் மேலே. பிறகு முன்னோட்டத்தைப் பார்க்க View மெனுவில் போயும் க்ளிக் செய்யலாம், கருவிப் பட்டைக்கு மேலுள்ள சாதா பட்டையில் ஒரு பட்டனையும் தட்டலாம்.

. சொடுக்குக!

வின்டோஸ் லைவ் ரைட்டர்

9:40 PM Posted by: தமிழில் கணினி 0 comments

ஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Windows Live Writer)

வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன் என்ன?

நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும்.

பொதுவாக நீங்கள் பதிவு செய்ய உங்கள் வலைத்தளம் சென்று லாங்இன் செய்த பின்பு தான், பதிவு செய்ய முடியும்.

ஆனால் நீங்கள் இந்த வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து இருந்தால் (தமிழில் தட்டச்சு செய்ய நீங்கள் NHMWriter என்ற இந்த மென்பொருள் இன்ஸ்டால் செய்யவேண்டும்) தமிழில் அழகான முறையில் டைப் செய்து Publish என்ற பட்டனை தட்டினால் போதும் பதிவு உங்கள் வலைபக்கத்தில்.

இன்ஸ்டால் செய்யும் முறை.

வின்டோஸ் லைவ் ரைட்டர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது.

மிக முக்கியமான கேள்வி மென்பொருளுக்கு கட்டணம் உண்டா? என்று கேட்டால் இல்லை.  தற்போது இலவசமாக மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து இறக்கிகொள்ள முடியும். முகவரி கீழ் தரப்பட்டுள்ளது

Download Windows Live Writer (Version 2008)

எவ்வாறு பயன்படுத்துவது

வின்டோஸ் லைவ் ரைட்டரில் எவ்வாறு நமது அக்கவுன்ட்ஸ் செட்டப் செய்வது?

மெனுபாரில் உள்ள டூல்ஸ் என்ற மெனுவை கிளிக் செய்து, அக்கவுன்ட்ஸ் என்ற மெனுவை கிளிக் செய்யவும்.

திரை விளக்கப்படம்.

image

புதிய அக்கவுன்ட்ஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுன்ட்களை எவ்வாறு வைத்து கொள்வது?

புதிய அக்கவுன்ட்ஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுன்ட்களை உருவாக்க (Add) ஆட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் அக்கவுன்ட்ஸ்  (Username, Password and Blog URL) விபரங்களை  தரவும். பின்பு சேவ் (Save) செய்யவும்.

திரை விளக்கப்படம்.

image

பதிவுகளை எவ்வாறு வகைப்படுத்துவது?

நாம் நமது பதிவுகளை வகைப்படுத்துவது உண்டு (Categories or Label). அதை இங்கு ஏற்படுத்தும் முறையை அறிந்து கொள்வோம்.

உங்கள்  வின்டோஸ் லைவ் ரைட்டரில் ஆக கீழ் பக்கத்தில் உள்ள சிறிய பார் ஒன்று தெரியும். அதில் (Set Categories) என்று குறிப்பிட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள வகைகள் (Categories) தெரியும். நீங்கள் வகைபடுத்த வேண்டிய தலைப்பை தேர்வு செய்யலாம் அல்லது புதிய தலைப்பை சேர்க்கவும் செய்யலாம்.

திரை விளக்கப்படம்.

image

நம்மில் பலர் வாரஇறுதி நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இடுவது போன்ற வழக்கம் உடையவர்கள் இருப்போம். அல்லது தட்டச்சு செய்து MS-Word  டாக்குமென்டாக சேகரித்து வைத்து, பின்பு பதிவு இடுவோம்.

நீங்கள் இதை வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய  விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது  எல்லாம் வின்டோஸ் லைவ் ரைட்டரில் ஆக கீழ் பக்கத்தில் உள்ள சிறிய பார் ஒன்று தெரியும். அதில் தேதி மற்றும் நேரம் இருக்கும். அதை கிளிக்செய்து தங்களுக்கு தேவையான தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடவும்.

திரை விளக்கப்படம்.

image

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வளைத்தளங்கள் வைத்து இருக்கும் பட்சத்தில், முதலில் எந்த வளைத்தளத்தில் பதிவு இட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.  அதைச்செய்ய நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மெனுவில் weblog என்ற வார்த்தையை கிளிக் செய்தால் அதில் தங்கள் இணையத்தளங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் வெளியிட விரும்பும் வலைத்தளம் பெயரை கிளிக் செய்து, பின்பு செய்தியை தட்டச்சு செய்யவும்.

திரை விளக்கப்படம்.

image

நீங்கள் தட்டச்சு செய்த பதிவுகளை பதிவு (Publish)செய்ய Publish என்ற பொத்தானை அமுக்கினால் போதும் உங்கள் வளைத்தளத்தில் பதிவு ஆகிவிடும்.

திரை விளக்கப்படம். 

image

நீங்கள் புதிதாக பதிவு செய்ய  New என்ற பட்டனை அமுக்கினால் போதும். புதிய பதிவுக்கான பக்கம் உங்கள் முன்னால் தெரியும்.

நீங்கள் தட்டச்சு செய்தவற்றை பாதியில் சேகரித்து வைக்க Save Draft என்ற பொத்தானை அமுக்கினால் போதும். அது நமது கணினியில் பதிவு ஆகிவிடும்.

நம்முடைய வளைப்பதிவில் படங்கள், இணைப்புகள் மற்றும் வீடியோ பதிவுகள் இணைக்க கீழ் தரப்பட்டுள்ள மெனு மிக உதவியாக இருக்கும்.

திரை விளக்கப்படம்.

image

என்னை பொருத்தவரை இந்த மென்பொருள், வளைத்தளங்களில் பதிவு இடுவதை மிக எளிதாகவும் இளகுவாகவும் ஆக்கியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகது. அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தி பெருமைக் கொள்வோம்.

 

=======================================================

 


2009 தமிழில் கணினி. All rights reserved.
Powered by Beta Templates and Blogger.
Template and Icons by DryIcons.com